சாய்ந்தமருது விழாக்கோலம் - தேசிய சுதந்திர தினம், களை கட்டியது (படங்கள்)
சாய்ந்தமருதின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 70 வது சுதந்திரதின நிகழ்வானது பாரம்பரிய கலைநிகழ்வுகள் வீதி ஊர்வலம் துஆ பிராத்தனை என களைகட்டிக் காணப்பட்டது.
தங்களது எதிர்பார்புக்கள் நிறைவேறவில்லையென்ற மன ஆதங்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் 70 வது சுதந்திரதின பிரதான நிகழ்வில் வெளியிடப்படும், 1000 ரூபாய் நாணயத்தாளில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சாய்ந்தமருது பள்ளிவாசலின் முகத்தோற்றம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடும் நிகழ்வாகவும் ஆகமொத்தத்தில் சாய்ந்தமருது பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டு பிரதான நிகழ்வுகள் பள்ளிவாசல் முற்றலில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளையிடும் அதிகாரி மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமுனா, ஊர்ப்பிரமுகர்கள்,உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாணவர்கள் என பெரும்திரளானோர் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் அதிதிகள் ஊர்மக்கள் புடைசூழ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இங்கு உரையாற்றிய சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கழிந்துள்ளதைக் கொண்டாடும் இலங்கைத் தாய் திருநாட்டின் மக்களுடன் அவர்களது மகிழ்வில் சாய்ந்தமருது மக்களும் இணைந்து மகிழ்வுறுவதாகவும் நாட்டில் நிர்வாகங்கள் பரவலாக்கப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களும் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற அவாவுடன் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொடுக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வுக்கான ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதியும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான எம்.எஸ்.எம்.முபாறக், சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் தாளில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் படத்தினை பிரசுரித்து சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு கௌரவத்தினையும் மதிப்பையும் வழங்கியுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர், நிதி அமைச்சர் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசுக்குக்கும் நன்றி தெரிவித்ததுடன் இப்பளிவாசலின் முகத்தோற்றத்தை வடிவமைத்தவருக்கும் குறித்த தோற்றத்தை புகைப்படம் பிடித்து சாய்ந்தமருதை கௌரவப்படுத்தும் வித்தத்தில் நாணயத்தில் வரும் அளவுக்கு முன்கொண்டு சென்ற அந்த சகோதரருக்கும் ஊர்மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் -
நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் பின்பற்ற முடியாதவர்கள், நாட்டின் சுதந்திரத்தினத்தை கொண்டாடுகிறார்கள். பிரதேச வாதத்தில் குளிர்காயும் ஒரு கூட்டமாகவே இவர்களை பார்க்கிறோம். இதை அச்சிட்ட அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களை கெளரவப்படுத்தும் நோக்கிலேயே அச்சிட்டுள்ளார்கள். ஒரு வேளை கல்முனை ஜும்மா பள்ளியின் படம் அச்சிடப்பட்டிருந்தால் சாய்ந்தமருதில் ஹனிபா மாஸ்டர் தேசிய கொடியை ஏற்றியதுக்கு பதிலாக எரித்திருப்பாரோ...??
ReplyDeleteஅது சரி ஊர் பேர் தெரியாத அந்த புகைப்படப் பிடிப்பாளர் யாரோ??
இந்த சாய்ந்தமருதில் தொற்றியுள்ள பிரதேச வாத நோய் ஏனைய ஊர்களுக்கும் பரவாமல் இருக்க புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், உலமாக்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்களா..??
Oru pallivaasalin maanpu kevalam oru aanavattukkum arasiyal palivaangalkalukkum.....palitheerkka veeethyil tadumaaarugirathu....
ReplyDeleteமாஷா அல்லாஹ் ஒரு நல்ல ஏட்பாடு
ReplyDeleteAlhamdullialah...am very proudly here to say that our Muslim ummah celebrating grandly independence day...
ReplyDelete