அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல், பல கோணங்களில் விசாரணை
அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்தச் சென்ற சில இளைஞர்கள் உணவக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து குறித்த உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீ வைத்துவிட்டு அருகிலிருந்த பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Post a Comment