தாமரை கோபுரத்தினால் பயனில்லை
கொழும்பு நகர மத்தியில் நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுரம் குதித்து தற்கொலை செய்துக்கொள்ள உகந்த இடம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா - பரணகமை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அபிவிருத்தி நடந்துள்ளத என அரசாங்கம் கூப்பாடு போட்டாலும் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. பல்வேறு கதைகளை கூறுகின்றனர். அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்ததாக கூறுகின்றனர். மேம்பாலங்களை திறக்கின்றனர்.
தாமரை தடாகம் இருக்கின்றது. தாமரை கோபுரம் இருக்கின்றது. தாமரை கோபுரம் இலங்கையில் இருக்கும் மிகவும் உயரமான கட்டடம். அதில் ஹோட்டல் இருக்கின்றதாம். அந்த ஹோட்டல் சுற்றுமாம்.
அந்த ஹோட்டலுக்கு சென்று தேனீர் கோப்பை ஒன்றை வாங்கி கொண்டு உட்கார்ந்தால், ஒரு சுற்று சுற்றும் போது முழு கொழும்பையும் காணமுடியும்.
ஊவா பரணகமையில் இருக்கும் உங்களுக்கு எதற்கு அது. அங்கு வெறும் தேனீரை கூட அருந்த முடியாமல் இருக்கும் எமக்கு அங்கு சென்று தேனீர் அருந்த முடியுமா?.
அவை நிர்மாணிக்கப்படுவது எமக்காக அல்ல. அவை மேல் தட்டு வகுப்பினருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்க்கை நடத்த நேரத்திற்கு பயிர் செய்ய எமக்கு தண்ணீர் கூட இல்லை.
உரிய நேரத்திற்கு உரம் கிடைப்பதில்லை. அறுவடைகளுக்கு விலையில்லை. தொழில் இல்லை. காணிகள் இல்லை எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment