ஏமாற்றம் அடைந்தது சிங்கலே
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்காக விமான நிலையவளாகத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சமிக்ஞை காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அது குறித்து ஆராய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று 12.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.
இவரை வரவேற்பதற்காக விமான நிலைய வளாகத்தில் சிங்கலே அமைப்பினர் மற்றும் பிக்குமார் காத்திருந்தனர்.
எனினும் இவர்களை சந்திக்க விடாமல் பிரியங்கவை வான் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த தேரர்கள்,
பிரியங்க பெர்னாண்டோவுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காகவே இங்கு நாம் வருகைதந்திருந்தோம். ஆனால் எம்மை சந்திக்க விடாமல் அவரை கறுப்பு கண்ணடி அடைக்கப்பட்ட வான் ஒன்றில் ஏற்றிச்சென்றார்கள்.
இவ்வாறு மறைத்து அழைத்துச்செல்லும் அளவுக்கு பிரியங்க பெர்னாண்டோ என்ன தவறு செய்தார் என தேரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post a Comment