Header Ads



மகிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் - ஞானசாரர்


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சவிடம் நாட்டை கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டிற்கு தேவையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாவிடின் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமிக்க பதவியில் இருந்து என்ன பயன் என்று பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டில் தற்போது அரசியல் ஸ்தீரமற்ற தன்மை காணப்படுகின்றது. ஆகையினால், யாராவது ஒரு தரப்பினர் ஆட்சி அமைக்க வேண்டும்.

அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு பிரதமருக்கோ அல்லது உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற மகிந்த ராஜபக்சவிற்கோ இடமளிக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு தேவையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முடியாவிடின், ஜனாதிபதி அந்த பதவியில் இருந்து என்ன பயன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

1 comment:

  1. Your very correct.that is the reason .yahapalana .

    ReplyDelete

Powered by Blogger.