தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது, திருடர்களை பாதுகாக்கும் கட்சியையா..?
ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையாகவும் சரியாகவும் நேருக்கு நேராக தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட வருமாறு நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (04) பிற்பகல் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது திருடர்களை பாதுகாக்கும் கட்சியையா அல்லது திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக்கூடிய கட்சியையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
அதேபோல், இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்பதற்கான காரணம் தம்மை தனிப்பட்ட ரீதியில் பலப்படுத்திக்கொள்ளவல்ல என்றும் ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பலப்படுத்துவதற்காகவே ஆகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனால் தூய்மையான ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மிக வினைத்திறனான முறையில் செய்து முடிக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
திருடர்களை அவர்கள் பாதுகாப்பது இருக்கட்டும்.... திருடியவர்கள் உங்கள் கட்சியில் அல்லவா இருக்கிறார்கள்
ReplyDeleteதிருடர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து திருடப்பட்டவைகளை மக்களிடம் மீட்டுக் கொடுக்கக் கூடிய கட்சி JVPதான் என்பதை, உங்களைப் போன்று நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளார்கள், ஜனாதிபதி அவர்களே!
ReplyDeleteJVP காலத்து காலம் மக்கள் ஆதரவை
ReplyDeleteபெரிக்கிக் கொண்டு வந்தாலும், அதன்
தலைமைகளின் செற்பாடுகள்,அதன்
சில சிரேஸ்ர உறுப்பினர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றால் கட்சி
பிளவுபட்டு அதன் கொள்கைகளிலும்
கோள்பாடுகளிலும் தளம்பல் ஏறபட்டு
அதன் ஆதரவுத்தளம் அடிக்கடி ஆட்டம் கண்டு வருவதே வரலாறாகும். இதனால் இவர்களால்
இந்தநாட்டிலே ஆட்சி அபைப்பதென்பது
இயலாத காரியம். ஒரு விடயத்தை பற்றி பேசுவதும் அறிக்கையிடுவதும்
மிகவும் இலகுவானது .இதைதான் இவர்கள் செய்து கொண்டு வருகின்றார்கள்.ஆனால் அதை செயலபடுத்த துணிவதும், செய்வதும் மிகவும் கடினமானது. அதற்கு பலபக்கத்திலுமிருந்து ஆதரவு கிடைப்பது என்பதுஅவசியமாகும்.
ஜனாதிபதியவர்கள் ஊழலை இலலாமல்
ஓழிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்.அதில் தனதுகட்சியை சார்ந்தவர்கள் என்றோ தன்னுடைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் என்றோ
வேற்றுமைகாட்டாது செயல்பட தொடங்கி விட்டார்.இது அவரது அண்மைக்கால நகர்வுகளினால்சான்று பகர்கின்றன.இதற்கு எல்லோருடைய பக்கபலமும் ஆதரவும் அவருக்கு
தேவைபடுகிறதது. அதைவழங்குவதை
விட்டுவிட்டு எப்போதோ ஆட்சி அமைக்க கனவுகாணும் நீங்கள், எங்களால்தான் இதுமுடியும் என வீறாப்பு பேசுவது எந்த வகையில்
நியாயம்? எனவே சகோதரரே நாட்டையும் நாட்டுமக்களையும் நேசிக்கின்ற உண்மையான அரசியல்
வாதிகளாக இருந்தால் கட்சிபேதங்களுக்கப்பால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த
முன்வர வேண்டியது அவர்களின் தார்மீக கடமையாகும்.
JVP காலத்து காலம் மக்கள் ஆதரவை

உறுதியான கொள்கை அற்றவர்களையும் தலைமைக்கு கட்டுப் படாதவதவர்களையும் வெளியேற்றி, JVP - கட்சி என்ற அடிப்படையில் தனது தரத்தை என்றும் முதலிடத்தில் வைத்திருக்கிறது.
ReplyDeleteஉள்ளூராட்சி மட்டத்தில் அவர்களது சாதனையை 'திஸ்ஸமஹராம' என்று ஒரே சொல்லில் சொல்லிவிடலாம்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அரசியல் என்பது 'சரீஅத்' தான். ஆனால், அந்தப் பலமில்லாதபோது, அதற்கடுத்ததாக நாம் தேர்ந்தெடுத்து வலுவூட்ட வேண்டியது அதற்கு நெருக்கமானதை அல்லவே?
நல்லாட்சி என்று சொல்லி பதவிக்கு வந்து நாட்களைக் கடத்திவிட்டு, தேர்தல் ஒன்று வந்ததும் திடீர் என்று எடுக்கும் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல நம் நாட்டினர்.
சீறிக் கொண்டிருந்த ஞானசாரையை சீண்ட விடாமல் இப்போது மட்டும் நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருக்க முடிந்த மர்மத்தை உணர்ந்து கொள்ளுங்கள் சகோதரரே!
பூமியில் நீதியை நிலைநாட்ட இரக்கப்பட்ட சமுதாயம், நீதிக்காக என்றுமே குரல் கொடுத்து, நேர்மையாக உழைப்பவர்களின் கரங்களைப் பலப்படுத்தக் கூடாதா?