ரணில் மீது, அமைச்சர் வசந்த மீண்டும் பாய்ச்சல் - நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் ஆதரவு
ஐக்கிய தேசிய கட்சியின் தெளிவாக மாற்றங்கள் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மிக விரையில் கட்சியில் தெளிவாக மாற்றம் ஏற்படவில்லை என்றால் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் இணைந்து பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கிடைத்துள்ள ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பங்குகொண்டிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்நோக்கி செல்லும் எனவும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாதெனவும் குறிப்பிட்டனர்.
Post a Comment