Header Ads



ஜனாஸா வாகானமொன்றை, பெற்றுத் தருமாறு கோரிக்கை

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஜனாசா வாகனம் இன்மையால் மக்கள் பெரும் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்.கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக தூர இடங்களிலும் மாவட்டத்துக்கு வெளியிலும் வைத்தியசாலைகளிலும் ஏற்படும் மரணங்களின் போது ஜனாசாவை கொண்டு வருவதற்கான வாகன ஏற்பாடுகள் இல்லை என்பதையும் மக்கள் கவலையடைகிறனர்.இதனால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் ஜனாசாவை வாகனமின்றி வேறு வகையில் உரிய வீட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு கிண்ணியாவில் இருக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட உரியவர்களும் இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜனாசா வாகனமொன்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


(ஒரு ஜனாசாவை பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் கொண்டு செல்லும் படத்தையும் இதில் காணலாம்)

ஹஸ்பர் ஏ ஹலீம்)



No comments

Powered by Blogger.