தற்போதுள்ள அரசாங்கத்தை, மக்கள் விரும்பவில்லை
கருத்துக் கணிப்புகளின்படி தற்போதுள்ள முறையில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என தெரியவருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
இந்த முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி மாற்றயமைக்கப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்.
எனினும் நாடாளுமன்றத்தை சட்டத்தின் பிரகாரம் அப்படி கலைக்க வேண்டுமாயின் முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் யோசனை ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.
அல்லது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். மேலும் நிதி நிலை அறிக்கை ஒன்றை தோற்கடித்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அப்படியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதனை ஜனாதிபதியால் மாத்திரமே செய்ய முடியும்.
மாற்றம் செய்ய வேண்டுமாயின் மாற்றத்தை ஏற்படுத்த கூடியவரான ஜனாதிபதியையே வலுப்படுத்த வேண்டும். 2019, 2020, 2025ஆம் ஆண்டு வரை எம்மால் காத்திருக்க முடியாது.
சிலருக்கு அப்படியான நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். ஆனால் எங்களுடைய எதிர்பார்ப்பு அதுவல்ல. மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்க வேண்டும்.
தீர்வுகளை வழங்க முடியாதிருக்கும் இடங்களில் துரிதமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மக்கள் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கட்சிகளின் சின்னங்களுக்கே வாக்களிக்க வேண்டும்.
மேலும் எமது கருத்துக் கணிப்பின் படி இம்முறை தேர்தலில் ஊழல், மோசடியற்ற உள்ளூராட்சி சபைகளை உருவாக்க வேண்டும் என்பது குறித்தே மக்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
Your the main hero supporter
ReplyDeleteFor mahinda Rajapaksa
பச்சைத் தண்ணீரில் பப்படம் பொரிக்கும் இந்த கள்வர் கூட்டத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மட்டும் மக்களுக்கு எம்மால் நல்லதைச் சொல்ல முடியும்.
ReplyDelete