ஜனாதிபதி நாடகம், ஆடவில்லை என்றால்...?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடகம் ஆடவில்லை என்றால் குற்றச்சாட்டில் உள்ள விதான கமகே என்பவரை பதவியில் இருந்து தூக்குங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதி பிணைமுறி குற்றச்சாட்டில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை கைது செய்தமை நல்ல விடயம். ஆனால், இவர்களை கைது செய்து நாடகம் ஆடுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடகம் ஆட வில்லை என்றால் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இவரின் பக்கத்தில் உள்ள மந்திரிகளாக இருக்கும் ஒருவரிடமும் ஏன் வாக்குமூலம் எடுக்கவில்லை.
முடிந்தால் குற்றச்சாட்டில் உள்ள விதான கமகே என்பவரை எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் பதவி விலக்குங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, ஏன் இன்னும் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment