ஜெனீவா தொடர் ஆரம்பம், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லை, சிங்கள - தமிழ் சமூகங்கள் பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை -26- ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
விசேடமாக எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி இலங்கை குறித்த புகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை குறித்த பிரதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெ ளியாகியுள்ளது. இதில் பல்வேறு விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இலங்கை விவகாரத்தில் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் செய்ட் அல் ஹுசென் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள முதலாவது அமர்வில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ுஹசைன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் உள்ளிட்ட தரப்பினர் உரையாற்றவுள்ளனர்.
முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ுஹசைன் இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதன்போது தனது அறிக்கையில் உள்ள விடயங்களை குறிப்பிட்டுக் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இம்முறை கூட்டத் தொடரில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசிய மக்கள் முன்னணி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் உரையாற்றவுள்ளனர்.
அதுமட்டுமன்றி தென்னிலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகளும் இம்முறை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தவுள்ளனர்.
அதேபோன்று தென்னிலங்கையிலிருந்து இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜெனிவாவில் முகாமிட்டு விளக்கங்களை அளிக்கவுள்ளனர்.
மேலும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பாக ஜெனிவா வளாகத்தில் இம்முறையும் பல்வேறு உபக்குழுக்கூட்டங்களை நடத்தவுள்ளன.
இது இவ்வாறு இருக்க வௌிவிவகார அமைச்சர் தலைமையில் அமைச்சின் உயர் அதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் ஜெனிவா நோக்கி செல்லவுள்ளனர். அதாவது எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் விவாதத்தின்போது இலங்கையின் சார்பில் வெ ளிவிவகார அமைச்சர் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமையை பாதுகாப்பது தொடர்பான ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தனது இலங்கை விஜயம் குறித்த அறிக்கையையே தாக்கல் செய்யவுள்ளார்.
Post a Comment