Header Ads



மாசுபட்ட நகரங்களின் பட்டியலில், கொழும்பும் சேர்ந்தது


உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின் படி, உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் டெல்லியை விட அதிக மாசுபாடு மிக்க நகரம் ஈரானில் பதிவாகியுள்ளது.

காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர்.

முதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30 இல் ஒரு பங்கு அளவுவில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய PM2.5 என்ற மாசு துகள்களில் கவனம் செலுத்துகின்றனர்.

ஏனெனில் இவ்வகை துகள்கள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதாகும். அத்துடன், நுரையீரல்கள் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழையும் திறன் பெற்றது. இந்த PM2.5 துகள்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) PM2.5 தரவைப் பார்த்தால், ஈரானிய நகரமான ஷபோல் முதலிடம் பிடித்துள்ளது. 100,000 க்கும் அதிகமான மக்கட்தொகை கொண்ட இந்த நகரம் ஈரானின் கிழக்கில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு சுமார் 120 நாட்கள் மணல் புயல் வீசும்.

இலங்கையின் கொழும்பு இந்தப் பட்டியலில் 36 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் குவாலியர் மற்றும் அலஹாபாத் ஆகிய இரு நகரங்களும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாட் நான்காவது இடத்தில் உள்ளது.

டெல்லி 11 ஆவது இடத்திலும், சீனத் தலைநகர் பெய்ஜிங் 57 ஆவது இடத்திலும் உள்ளது.

அடுத்ததாக காற்றில் உள்ள பெரிய துகள்களை வைத்து காற்று மாசுபாட்டை அளவிடுகின்றனர்.

PM10 எனப்படும் பெரிய வகை மாசு துகள்களாக இருந்தாலும் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

PM10 எனும் மாசு துகளின் தரவு அடிப்படையில் பார்த்தாலும் ஷபோல் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையின் படி டெல்லி 25 ஆவது இடத்திலும், பெய்ஜிங் 125 ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கையின் தலைநகர் கொழும்பு இப்பட்டியலில் 64 ஆவது இடத்தில் உள்ளது.

No comments

Powered by Blogger.