Header Ads



ஆசி­ரியைக்கு இப்படியும் நடந்தது - ஓருவர் கைது

சிலாபம் பிர­தேச பாட­சாலை ஒன்றில் பணி­யாற்றும் ஆசி­ரியை ஒரு­வரின் பணம் மீளப் பெறும் அட்­டையைத் திருடி பணத்தைப் பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் விவ­சாயத் திணைக்­க­ளத்தின் அதி­காரி ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பள்­ளம பிர­தே­சத்தைச் சேர்ந்த 26 வய­தான ஆசி­ரி­யையின் வங்கி அட்­டையே இவ்­வாறு திரு­டப்­பட்டு பணம் மீளப் பெறப்­பட்­டுள்­ளது.

குறித்த ஆசி­ரியை சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டின் பிர­காரம், தனது பாட­சா­லையில் இல்ல விளை­யாட்டுப் போட்­டிகள் நடை­பெற்ற தினம் தான் விளை­யாட்டுப் போட்டி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும், தனது கைப்­பையை பாட­சா­லையின் விளை­யாட்டு அறை யில் வைத்­தி­ருந்­த­தா­கவும், அந்த பையில் தனது வங்­கியின் ஏ.ரீ.எம் அட்டை உள்­ளிட்­டவை இருந்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

விளை­யாட்டுப் போட்­டிகள் முடி­வ­டைந்து வந்து தனது கைப்­பையை எடுத்துப் பார்த்த போது அத­னுள்­ளி­ருந்த வங்கி அட்டை காணாமல் போயி­ருந்­த­தா­கவும் அதனைத் தேடிப் பார்த்த போதும் அது கிடைக்­க­வில்லை என்றும் அதே நேரம் தனது கைப்­பே­சிக்கு வங்கிக் கணக்­கி­லி­ருந்து பணம் பெறப்­பட்­டுள்­ள­தாக வங்­கி­யி­லி­ருந்து அனுப்­பப்­படும் குறுஞ்­செய்தி கிடைத்­தி­ருந்­த­தனை அவ­தா­னித்து தனது வங்கி அட்­டையை யாரோ திருடிச் சென்று பணம் பெற்­றுள்­ளதை உறுதி செய்து கொண்­ட­த­னை­ய­டுத்தே இந்த முறைப்­பாட்டை செய்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து குறித்த வங்­கிக்குச் சென்ற பொலிஸார், ஆசி­ரி­யைக்கு வங்­கி­யி­லி­ருந்து குறுஞ்­செய்தி வந்த நேரத்தில் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கெம­ராவில் பதி­வா­கிய காட்­சி­களை பார்­வை­யிட்­டுள்­ளனர்.

அப்­போது மூன்று சந்­தர்ப்­பங்­களில் குறித்த பணம் மீளப் பெறும் அட்­டையைப் பயன்­ப­டுத்தி ஒருவர் ஏ.ரி.எம் இயந்­தி­ரத்தில் பணம் பெறும் காட்சி பதி­வா­கி­யி­ருந்­துள்­ளது. ஆசி­ரி­யையின் வங்கிக் கணக்கில் அவ­ரது பெப்­ர­வரி மாதச் சம்­பளப் பணம் காணப்­பட்­டுள்­ளது.

அதனை குறித்த நபர் பெற்றுக் கொண்­டுள்­ள­மையும் குறித்த ஆசி­ரியை தனது ஏ.ரீ.எம் அட்­டையில் பணம் பெறு­வ­தற்­கான இர­க­சிய குறி­யீட்டு இலக்­கத்­தையும் குறித்து வைத்­தி­ருந்­தமை சந்­தேக நப­ருக்கு வச­தி­யாக அமைந்­தி­ருந்­துள்­ளமை தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பின்னர் கண்­கா­ணிப்புக் கெமராக் காட்சிகளை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.