Header Ads



உறுதியற்ற நிலைக்கு நாடு, செல்வதை அனுமதிக்காதீர்கள் - மைத்திரியிடம் வலியுறுத்திய சம்பந்தன்


நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசினார்.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது முக்கியம் என்றும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments

Powered by Blogger.