ஜனாதிபதி அவர்களே, வாளை இடுப்பில் ஏந்திக்கொள்வது ஆபத்தானது - மகிந்தவின் சுளீர் விளக்கம்
இரண்டு தடவைகள் நாட்டு மக்களை ஏமாற்றிவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மொரகஹாதென்ன நீர்ப்பாசனத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த போது ஜனாதிபதி அது தனது கனவு என்கின்றார்.
அந்த திட்டத்தின் 70 வீதமான பணிகளை நான் பூர்த்தி செய்திருந்தேன். என்னை கடன்காரன் எனக் கூறும் ஜனாதிபதி, எதற்காக கடன் பெற்றுக் கொண்டேன் என கூறவில்லை.
அண்மையில் நான் பார்த்தேன் ஜனாதிபதி மிகுந்த கோபத்துடன் கருத்து வெளியிட்டார், குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரையில் நான் பதவியை விட்டு போவதில்லை என்றார்.
அவ்வளவு கோபம் கொள்ள வேண்டாம் ஜனாதிபதி அவர்களே, இரண்டு பக்கமும் வெட்டக்கூடிய வாள் ஒன்று உண்டு என கூறுகின்றார்.
அவ்வாறான வாளை இடுப்பில் ஏந்திக்கொள்வது சற்றே ஆபத்தானது ஜனாதிபதி அவர்களே. பொய் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பெற்றுக்கொண்டனர்.
எனினும், ஒரு தடவை பொய்களுக்கு ஏமாற்றமடைந்த மக்கள் மீளவும் ஏமாறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment