Header Ads



மருத்துவர் ரிஸ்னி சகாப் தலைமையில், விசித்திர சத்திர சிகிச்சை (இலங்கை வரலாற்றில் முதன்முறையாக)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக குளியாபிட்டி மருத்துவமனையில் கழுத்தின் வெளிப்பகுதியில் அறுவையற்ற முறையில் சத்திர சிக்சை இன்று இடம்பெற்றுள்ளது.

குளியாபிட்டிய போதான மருத்துவமனையின் தொண்டை காதுகள் குறித்த விசேட மருத்துவரின் தலைமையில் இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றள்ளது.

உடபத்தர பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் நலமாகவுள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைராய்டு சுரப்புக் குறையால் ஏற்பட்டிருந்த வீக்கப் பகுதி, 4 மணிநேர அறுவையற்ற சத்திரசிகிச்சைக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

குளியாபிட்டி மருத்துவமனை வரலாறு மற்றுமன்றி இலங்கையில் வேறு எந்தவொரு மருத்துவமனைகளிலும் இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றதாக தகவல் இல்லை என அந்த மருத்துவமனையின் விசேட மருத்துவர் ரிஸ்னி சகாப் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளதோடு, கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே இந்தியாவில் இதுபோன்ற சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தெற்காசியாவில் உள்ள மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ள சத்திர சிகிச்சைகளில் 4 ஆவது அறுவையற்ற சத்திர சிகிச்சை இதுவென அந்த மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழுத்தில் அறுவை சத்திர சிகிச்சைகளுக்கு பின்னர் வெளிப்பகுதியில் அதன் தழும்புகள் தெரிவதால் சிலர் அந்த சத்திரசிகிச்சைக்கு உட்பட விரும்பாததன் காரணமாக இவ்வாறு அறுவையற்ற சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சத்திர சிகிச்சைக்கு பின்னர் குறைந்த வலி மற்றும் குறைந்த இரத்த போக்கே காணப்படுவதுடன் கழுத்தில் தழும்புகளும் ஏற்படாமல் இருப்பது சிறப்பம்சமாகும்.

தொழில்நுட்ப கோளாறு இல்லாவிடின் சிறிது நேரத்திலேயே அறுவையற்ற சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என விசேட மருத்துவர் ரிஸ்னி சகாப் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கௌவரமும் மதிப்புமிக்க சிறப்பு மருத்துவர் ரிஸ்னி சஹாப் அவர்களுக்கும் அவருடைய திறமைவாய்ந்த மருத்துவ குழுவுக்கும் இலங்கை மக்கள் சார்பாக எமது பணிவான கௌரவத்தையும் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகைய சிறப்பான மருத்துவர்களுக்கு நிச்சியம் அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் கிடைக்க நாம் பிரார்த்தனை செய்கின்றோம். எமது பணிவான நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.