அடுத்த தேர்தலில் ஜெயிப்போம் - சந்திரிக்கா சவால்
உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளில் சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும் அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவதாக சந்திரிக்கா குமாரதுங்க சவால் விட்டுள்ளார்.
வேயாங்கொடைப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட சந்திரிக்கா, உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வௌிக்காட்டியுள்ளனர்.
இருந்தும் நல்லாட்சி அரசாங்கம் இப்படியே தொடரும். இந்த அரசாங்கத்தில் இறுதிவரை பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார்.
உள்ளூராட்சித் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் அடுத்துவரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி வெற்றிப்பாதைக்குத் திரும்பும். கட்சியை வெற்றி பெறவைத்துக் காட்டுவோம் என்றும் சந்திரிக்கா சவால் விட்டுள்ளார்.
UNP will be annihilated in all upcoming elections.
ReplyDelete