ஐ.தே.க. அமைச்சரின் வீட்டில், இரகசிய கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றை நடாத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற்றதன் பின்னர் நேற்றிரவு (25) அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இச்சந்திப்பில் விஜேதாச ராஜபக்ஷ, அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாமல் போன ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.கள் பலரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது ஆதரவை இக்கூட்டத்துக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. dc
Post a Comment