முஸ்லிம்களை எம்மிடமிருந்து தூர விலக்கியது, யார் என்பது நன்றாகவே தெரியும் - மஹிந்த
மஹிந்த ராஜபக்ஸ் தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதி கீழ்வருமாறு,
Q :2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை?
A: இந்த நாட்டு மக்களின் தேவைக்கு அப்பால் சர்வதேச தேவைகளுக்கு அமைவாகவே இலங்கையில் இனங்களை அடிப்படையாகக் கொண்ட ஆயுத மோதல்கள் உருவாகின. இந்த நாட்டை பிரிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், அந்த முயற்சியை யுத்தத்தின் மூலம் நான் முடித்து வைத்தேன். எனினும் இனவாத சக்திகள் நான் தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவன் என்ற ஒரு பிரமையை உருவாக்கின. எனினும் யுத்தம் முடிந்ததன் பின்னர் எனது அரசாங்கம் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப எவ்வளவு வேலைகள் செய்தது தெரியுமா? தெற்கை விட வடக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்த நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ன செய்தது? தமிழ் கூட்டமைப்பு இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ளது. அவர்கள் கடந்த மூன்று வருடத்தில் தம் மக்களுக்காக என்ன செய்தனர் தமிழ் அரசியல் கட்சிகள் எப்போதுமே மக்களை ஏமாற்றுவதையே செய்துவந்துள்ளன.
கவலையை விற்று வரப்பிரசாதங்கள் பெற்றதையே அவைகள் செய்தன. தெற்கு மக்களைப்போன்று வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தவே நான் முயற்சித்தேன். அதைத்தான் நான் செய்ய வேண்டும்.முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூர விலக்கியது யார் என்பது இன்று நன்றாகவே தெரியும். இவ்வாறு தற்காலிக அரசியல் சுயலாபத்திற்காக இன ரீதியாக மோதல்களை ஏற்படுத்துவது நீண்ட காலத்தில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தத்துவங்கள் பிறப்பது போதையின் உச்ச கட்டத்திலா அல்லது ஆழ்ந்த நித்திரையிலா என்பதை புரிந்து கொள்வது சிரமமாக இ்ருக்கின்றது.
ReplyDelete