என்று தணியும், இந்த சாதிய வெறி!
தலித் சிறுவனும் தாயும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சிறுமி வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் இன்று -24- நடந்த சாதிவெறி கொடூரம்.
விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தின் மீது, ஒரு பதினான்கு சென்ட் இடப்பிரச்சனையின் காரணமாக, தமது சாதிய வெறித்தனைத்தைக் காட்டியிருக்கிறது வன்னியக் கும்பல். அந்த தலித் குடும்பத்தின் விதவைத் தாய், மற்றும் அவருடைய எட்டு வயது மகனையும் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த சாதிவெறிக் கும்பல், அவருடைய 14 வயது மகளை கூட்டு வல்லுறவு செய்துள்ளது.
தண்டனைகளை கடுமையாக்கி உடன் தூக்கு தண்டனை கொடுத்தால் ஒழிய இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. ராமதாஸ் தொடங்கி வைத்த சாதீய வெறி இன்று வரை தொடர்கிறது.
Post a Comment