Header Ads



மகிந்தவின் சைகையினால், பாராளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றை தினம் சமகால அரசியல் நிலவரம் குறித்து விஷேட விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

பிரதமரை பதவி விலகுமாறு அண்மைகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையடுத்து, பல முக்கியமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வந்தன. இதில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையிலேயே, நேற்றைய தினம் நாடாளுமன்றில் விஷேட விவாதம் இடம்பெற்றிருந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, மகிந்த ராஜபக்ச, "பிரதமர் கதிரையைக் காட்டி தொடர்ந்து அந்தக் கதிரையிலேயே அமர்ந்திருங்கள்'' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சைகை காட்டியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த செயல் சபையிலிருந்த பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. சமகால அரசியல் நிலவரம் குறித்து விவாதம் நடைபெற்ற போது மகிந்த ராஜபக்ச இடைநடுவில் சபைக்கு வந்திருந்தார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினரை பார்த்து கேலிசெய்துகொண்டிருந்ததுடன், கை சைகைகளையும் காட்டிக்கொண்டிருந்தார். இது சபையிலிருந்த பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.

ஒருகட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஆசனத்திலிருந்து எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். எனினும், மகிந்த ராஜபக்ச பிரதமருக்கு கை சைகையை காட்டியிருந்தார்.

“வேண்டாம் கதிரையில் தொடர்ந்து அமர்ந்திருங்கள் என பலமுறை கை சைகையைக் காட்டினார்.” முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த நடவடிக்கை பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.

1 comment:

  1. hahaha ithu saihai alla Manathil ulla pulukkam....
    They tried to create trouble in the country but failed

    ReplyDelete

Powered by Blogger.