நாட்டின் சில, பகுதிகளில் பனிபொழிவு
கடந்த இருநாட்களாக மலையகத்தில் அதிகளவு பனிபொழிவு அதிகரித்துள்ளமையால் அதிகளவு குளிர் காலநிலையாக மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, ஹப்புத்தளை, மடுல்சிமை, நமுனுகுல, பசறை பகுதிகளில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலையும் அதிகாலை வேளையிலும் மாலை வேளைகளிலும் நிலவுவதால் பாடசாலை மாணவர்கள், தேயிலைத்தோட்ட தொழிலாளிகளும் பெரிதும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதையும் காணமுடிகிறது.
இக்காலநிலை தொடருமாயின் வரட்சித்தன்மை ஏற்பட்டு தேயிலைச்செடிகள் பாதிப்புக்குள்ளாகி, தொழில்நிலை பாதிப்படையக்கூடுமென தொழிலாளர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவலைத்தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் வேளைகளில் போக்குவரத்து மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Post a Comment