சுடரொளி ஆசிரியரின் வினாக்களும், அம்பாறை வன்முறையும்..!!
-Sivarajah Ramasamy-
வெட்கம்... அவமானம்
சாப்பாட்டில் ஒருவித மாத்திரையை கலந்து இனவிருத்தியை தடை செய்ய வேலைகள் நடப்பதாக கூறி அம்பாறையில் முஸ்லிம் கடைகள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டு உண்மையெனில் எனது சந்தேகங்கள் ....
* சிங்களவர்களை தேடித் தேடி அந்த கடையில் சாப்பாடு கொடுக்கப்பட்டதா ?
* முஸ்லிம்களும் தமிழர்களும் அங்கு சாப்பிட்டிருப்பார்களே ... அவர்களின் கதி என்ன ?
* சரி ... அப்படி கலந்ததாக கூறப்படும் மாத்திரைகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதா?
* யாராவது இப்படி ஒரு வேலையை செய்து ஒரு வன்முறைக்கு தூபமிட முயற்சித்திருக்க மாட்டார்களா?
* இப்படி ஒன்று நடந்திருந்தால் அதை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு ஏன் சட்ட ரீதியாக அணுகவில்லை?
சிங்கள மக்கள் அனைவரையும் இதற்காக குற்றஞ்சாட்டி இன்னுமொரு வன்முறையை நாமும் தூண்டிவிடக் கூடாது....
முஸ்லிம்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் கடந்த வாரம் சொல்லி இருந்த சூழ்நிலையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது...
எப்போது திருந்தப் போகிறார்கள் இவர்கள்...?
படித்தும் சிந்திக்கத் தெரியாத மக்களைக் கொண்ட நாடு
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை எண்டா தமிழன் ஏதோவொரு அவனுக்கு ஆதரவு தெரிவிக்கிறான்.
ReplyDeleteமயன்மார் , சிரியா படுகொலைக்கு முதல் எதிர்ப்பு தெரிவிச்சவன் இந்த தமிழன் தான் .
ஆனா தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்டா, அதுக்கு காரணமே முஸ்லிமா தான் இருக்கிறான் .