Header Ads



அம்பாறை கலவரம் - நீதிமன்றத்தில் இன்று நடந்த, முக்கிய விவகாரங்கள் (Latest Update)


நேற்று இரவு இடம்பெற்ற இனவெறி தாக்குதல் சம்பந்தமாக எந்தவொரு கைது நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறாத நிலையில் இன்று மதியம் 4 மணியளவில் மொத்தமாக 8 வழக்குகளை அம்பாறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்குகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிகள் சார்பாக சட்டத்தரணிகள் Muhaimin Khalid, Radheef Ahamed  ஆகியோரோடு நானும் ஆஜராகியிருந்தேன்.

பொலிஸாரால் பெரும்பான்மையினத்தவர் எவரையும் இதுவரை கைது செய்யாமை, போதுமான அளவில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்காமை, பள்ளி மூடப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளமை, முஸ்லிக்கள் பயத்தினால் வெளியேறியுள்ளமை மற்றும் இச்சம்பவத்தின் மொத்தப் பின்னனி ஆகியவற்றை நீதிமன்றிற்கு விளக்கமாக எடுத்துக்கூறினோம். மேற்படி விடயங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை அம்பாறை பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளது.

1. அடுத்த தவணைக்கிடையில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் இயன்றவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்.
2. டயலொக், மொபிடெல், எயார்டெல், ஹட்ச் மற்றும் எடிசலாட் நிறுவனங்கள் கலவர நேரத்தில் இடம்பெற்ற இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட் அனைத்து தொலைபேசி பரிவர்த்தனை விவரங்களை பொலிஸாருக்கு கொடுக்க வேண்டும்.
3. அம்பாறையிலிருந்து பயத்தினால் வெளியேறியிருக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் அவர்களின் இடத்திற்கு சென்றேனும் வாக்குமூலங்களை பொலிஸார் சேகரிக்க வேண்டும்.
4. தாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து CCTV கமராக்களின் பதிவுகள் அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.
5. முதலில் பிரச்சினையை ஏற்படுத்திய சிங்கள இளைஞரின்  தொலைபேசி பரிசோதிக்கபட்டு கலவரத்திற்கான ஆதாரங்களை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அதன் பின்னர் இறைவனின் உதவியால் நெடும் சமர்ப்பணங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களைகளையும் பிணையில் எடுக்க முடிந்தது. பின்னர் 5 மணியளவில் அம்பாறை SP, ASP, HQI மற்றும் OIC ஆகியோர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலை நடத்தினோம். அவர்கள் பின்வரும் உத்தரவாதங்களை எமக்கு அளித்தனர்.

1. மிக விரைவில் (நாளை அல்லது மறுநாள்) மூடப்பட்டுள்ள பள்ளவாசல் சுத்தப்படுத்தப்பட்டு தொழுகைளை மேற்கொள்ள திருப்பி தரப்படும்.
2. சேதமடைந்த பள்ளியினை மீளக் கட்ட அரசாங்க அதிபரூடாக நிதி ஒதுக்க முயற்சிக்கப்படும்.
3. வெள்ளிக்கிழமைக்குள் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு கலவரத்திற்கு 
கைது செய்யப்படுவர்.

-  ஹஸ்ஸான் றுஷ்தி (சட்டத்தரணி)

3 comments:

  1. Well done

    Well done M/S Hassan Rushdie and fellow lawyers.


    ReplyDelete
  2. sham on MY3 and Ranil...

    What Mahinda is going to say about this incident ? and this Racist ?

    ReplyDelete
  3. do not wait MY3 and Ranil, they will not take any actions against to racism

    ReplyDelete

Powered by Blogger.