முஸ்லிம்களுக்கு சமாதானம் வேண்டுமென்றால், சிங்களவரை கைதுசெய்யாதே..!
அம்பாறையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி ஆராயும் கூட்டமொன்று அம்பாறை கச்சேரியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அங்கு சிங்களவர்கள் தெரிவித்த கருத்துக்கள், வேடிக்கை நிறைந்ததாக இருந்துள்ளது.
குறிப்பாக பள்ளிவாசல் மீது வன்முறையை மேற்கொண்ட சிங்களவர்களை எக்காரணம் கொண்டும் கைது செய்யப்படக் கூடாதெனவும், முஸ்லிம்களுக்கு சமாதானம் வேண்டுமென்றால் முஸ்லிம்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அப்போதுதான் இணக்கப்பாடு ஏற்படுமெனவும் வலியுறுத்தபட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் சிங்கள தரப்பிலிருந்து கூறப்பட்ட இவ்விடயங்களை கேட்டு முஸ்லிம் தரப்பு அதிர்ச்சியடைந்தாகவும், வன்முறையை நடாத்திய சிங்களக் காடையர் கூட்டத்தை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்வதை இது வெளிச்சமிட்டு காட்டுவதாகவும் சந்திப்பில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.
This is how the future destiny of Muslims going to be, be subservient to Majority demands, unless a united front is formed to act with wit, tact, wisdom and diplomacy in a coordinated and concerted manner be it politics, religion or all other spheres of society.
ReplyDelete