தாமரை மொட்டுகளுடன், சபைக்குவந்த உறுப்பினர்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், மத்திய மாகாண சபையமர்வு நேற்று (20) முதன்முறையாக நடைபெற்றது.
இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்கள், தாமரை மொட்டுகளைத் தூக்கிப் பிடித்துகொண்டு சபைக்கு வந்தனர்.
கண்டி-பல்லேகலையில் உள்ள மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு அருகில் ஒன்றுகூடிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், வெளியில் நின்றுகொண்டிருந்த ஆதரவாளர்களிடமிருந்து தாமரை மலர் மொட்டுகளைப் பெற்றுக்கொண்டு, சபையை நோக்கிச் சென்றனர்.
அதன்போது, ஆதரவாளர்கள் பட்டாசுகளைக் கொளுத்தி, வாழ்த்துத் தெரிவித்து அனுப்பிவைத்தனர்.
தாமரை மொட்டுகள் கேஸ் விலையைக் குறைக்கும். பொருட்கள் விலையேற்றத்தைத் தடுக்கும். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும்.
ReplyDelete