Header Ads



யார் தீவிரவாதிகள்..?


சரியாக இரவு 11, மீனாட்சி கோவிலில் தீப்பிடித்து விட்டது என்று பதட்டத்தோடு தோழர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள்.

அங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான கடைகளிலும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. உயிரிழப்பு கூட ஏற்படலாம். அது குறுகிய வழி உடனே தீயணைப்புத் துறையும் செல்லவும் முடியாது. நாங்கள் உடனே செல்கிறோம் தோழர் என்றார்கள்

நான் சொன்னேன், வேண்டாம் தோழர், கோவில் முழுதும் இந்துத்வா அமைப்புகளின் கட்டுப்பாட்டிற்க்குள் வந்துவிட்டது.

அவர்கள் நம்மையும் இசுலாமியர்களையும் குறி வைத்து தான் கூச்சலிடுகிறார்கள்.

ஒரு வேளை நாம் சென்றால் நிச்சயமாக மிகப்பெரிய கலவரத்தை தூண்டிவிடுவார்கள். தற்போது நாம் அங்கே செல்ல வேண்டாம் என தோழர்களிடம் சொல்லி விட்டு அலைபேசியை துண்டித்தேன்.

மறுபுறம் தொலைக்காட்சிக்கு, அங்கே இருக்கிற இந்துத்வா அமைப்பு பொறுப்பாளர் பாரத் மாதா கீஜே என்று முழங்கி கொண்டே பேட்டி கொடுக்கிறார்.

பேட்டியின் போது... மீனாட்சி கோவிலை சுற்றி இசுலாமியர்கள் கடை உள்ளது அவர்களால்... என்று முடிக்கும் முன்னரே, அவர் பேச வருவதை புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் மீடியாக்கள் அவரது பேச்சை உடனே நிறுத்தியது.

மறுபுறம் 30 க்கும் மேற்பட்ட இசுலாமியர் கள் கோவிலின் முன்பு கூடி தீயணைப்புத் துறைக்கு வேண்டிய அத்தனை உதவிக ளையும் செய்து கொண்டிருந்தார்கள். பதறிக் கொண்டே இருந்தார்கள். யார் யாரையோ அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே கோவிலுக்கு வா என்று பேசி கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பள்ளிவாசலையும் மீனாட்சி கோவிலையும் வேறாக பார்க்கவில்லை - என்பதை அவர்கள் முகத்தில் தோன்றிய பதட்டமும் பரபரப்புமே பறைசாற்றியது.

அவர்களைத்தான் இந்துத்வாவாதிகள் தீவிரவாதிகள் என்று மதுரை முழுதும் பரப்புரை செய்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் தீ எரிந்த போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தெரியும் யார் தீவிரவாதி, யார் கலவரக்காரர்கள் என அந்த நேரத்தில் எதை காட்ட வேண்டும். எதை காட்ட கூடாது என்பதில் தெளிவாக இருந்து மிகப் பெரிய கலவரத்தை தடுத்து நிறுத்திய மீடியாக்களுக்கும் பேரன்பும் நன்றியும்

- மணி அமுதன்-

No comments

Powered by Blogger.