எதுவும் செய்ய முடியாது - கைகழுவினார் சபாநாயகர்
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
தேசிய அரசாங்கம் தொடர்பில் எனது முடிவினை அறிவிப்பதாக கூறினேன். இதன்படி இரு பிரதான கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என கோரினர். இதன்படி அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினேன்.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவேன் என்றார்.
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 4:53)
www.tamililquran.com