ஐ.தே.க. துணைத் தலைவராக சம்பிக..?
ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவர் பதவியொன்றுக்கு அமைச்சர் சம்பிக ரணவக நியமிக்கப்படவுள்ளதாக ஶ்ரீகொத்தா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பின் கீழ் அக்கட்சியில் புதியவர்கள் முக்கியமான பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் துணைத்தலைவர் பதவியொன்றை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம மற்றும் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
எனினும் சம்பிக ரணவக தரப்பில் இருந்து இதுவரை எதுவித பதிலும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே அவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது முஸ்லிம்களை அக்கட்சியிலிருந்து துரத்தும் நடவடிக்கையாகும்.
ReplyDeleteNot a good news..
ReplyDeleteஇனத்துவேசத்தின் அடுத்த பக்கமாக ஐ.தே.க.மாறப் போகின்றதா?
ReplyDelete