"இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடல்ல" என்பது பற்றி உடனடியாக ஆய்வுசெய்ய வேண்டும்
இலங்கை நாடு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதல்ல என சர்வதேச மன்னிப்புச்சபை பிரகடனப்படுத்தியிருப்பது பற்றி அரசும் முஸ்லிம் எம் பீக்களும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
கட்சி தலைமயகத்தில் நடைபெற்ற உயர் சபை கூட்டத்தில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 2017ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற இனவாத சம்பவங்களை ஆதாரமாக காட்டியே சர்வதேச மன்னிப்பு சபை இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ பத்து வருடங்கள் ஆட்சி செய்தும் இந்நாடு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்றது என சர்வதேச மன்னிப்பு சபை பிரகடனப்படுத்தவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான இந்த அரசு வந்து மூன்று வருடத்துள் இப்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்றால் இதற்கு காரணம் யார் என்பதை அரசு ஆராய வேண்டும். அரசிடம் அதிகாரம், சட்டம், பொலிஸ், இராணுவம் என இருந்தும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே மன்னிப்புச்சபை இவ்வாறு தெரிவித்துள்ளதானது அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகும்.
இந்த அரசு என்பது நாட்டின் 90 வீத முஸ்லிம்களின் ஆதரவால் வந்த அரசாகும். அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்பது அவசியம் முஸ்லிம்களும் முஸ்லிம் எம்பீக்களும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகவே இது பற்றி அரசு முழுமையாக ஆய்வு செய்து இனியும் முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயமும் நடக்காமல் பார்ப்பதுடன் உலகிலேயே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடு இலங்கைதான் என்ற எடுத்தால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி நடப்பதாக உலகம் ஏற்கும் என்பதை உலமா கட்சி அரசுக்கு சொல்லிக்கொள்கிறது.
Better to research our imaan aamal ahlaq .specially entire muslims how to deal with non muslims in this country.
ReplyDelete2.our business and other deal how much we are doing according to islam?
If we follow halal haram our personal life then allah will serve us.from anykind of situation.