"தவறுதலாக எனக்கு, அமைச்சு பதவி வழங்கிவிட்டார்கள்"
அமைச்சரவை மாற்றத்தின் போது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, போதைப்பொருள் ஒழுப்பு, சமூக மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட, அஜித் பி பெரேராவின் அமைச்சு விடயதானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த கூடுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு, இதற்கு முன்னர், மின்வலு, புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சுப் பதவி வழங்கிப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில், அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நான் இன்றும் இராஜாங்க அமைச்சர்தான். புதிய இராஜாங்க அமைச்சுப் பதவி, தவறுதலாக எனக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் பலரும் குழம்பிபோயுள்ளனர்” என்றார்.
இதேவேளை, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சுப் பதவியில், இன்று (27) அல்லது அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமெனத் தகவல் தெரிவிக்கின்றது.
Post a Comment