Header Ads



தீவிர சிகிச்சைப் பிரிவில், நல்லாட்சி அரசாங்கம் - விரைவில் இறுதி அஞ்சலி

நல்லாட்சி அரசாங்கத்திற்கு விரைவில் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய நிலை கட்டம் வரும் என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி குறித்து இன்று -27- ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக ஆரவாரம் செய்தபடி பதவிக்கு வந்தது.

ஆனால் தற்போது ஒரு நோயாளியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நிலையில் திணறிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அந்த செயற்கை சுவாசக் குழாய்களை கழற்றியெறியும் முயற்சியில் அமைச்சர்களான வசந்த சேனநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதுவும் மிக விரைவில் நடைபெறும்.

அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தும் கட்டம் விரைவில் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.