Header Ads



மகிந்தவை கட்டிப்பிடித்திருந்த அமீர் அலி - ஹக்கீம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அவரோடு கட்டிப்பிடித்து இருந்த அமீர் அலி அப்போதே கோறளைப்பற்று மத்திக்கு தனி பிரதேசசபையை கொண்டு வந்திருக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது கட்சியினை விட்டு சென்றவர்களுக்கு கதவு மூடப்பட்டுள்ளது. இவர்களுக்காக மீள திறக்கப்பட மாட்டாது. வாழைச்சேனையில் வாக்குகளை பெறுவதற்கு வழியில்லாமல் அமீர் அலி பிரதமரை அழைத்து வந்திருந்தார்.

வந்து கோறளைப்பற்று மத்திக்கு பிரதேச சபை தருவதாக தெரிவித்தார்.

இந்த விடயத்தினை அமீர் அலி மகிந்த காலத்தில் அவரோடு கட்டிப்பிடித்து இருந்த வேளையில் இதை செய்திருக்க வேண்டும். அப்போது தமிழ் மக்களை பற்றி கவலைப்படாமல் செய்து முடித்திருக்கலாம்.

முதலில் இழந்த கிராம சேகவர் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். இது நடக்காமல் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையை தரப்போகின்றோம் என்பதில் அர்த்தம் இல்லை.

இந்த மண்ணில் நடைபெற்ற அட்டூழியங்கள், அநியாயங்கள், உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கலாச்சாரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்கு முடிவு கட்ட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

காணியை மீட்டுத் தருவதை விட்டுவிட்டு இருக்கின்ற காணியை பிடிப்பதில் இவர்களின் கவனம் போகின்றது. தங்களுக்கு காணி சேர்ப்பது எப்படி வாகரை தியாவட்டவான் பகுதிக்கு சென்றால் தெரியும். எங்கெல்லாம் வேலி கட்டி காணி பிடித்துள்ளார்கள் என்று தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.