ஆபாச இளைஞர்கள் மீது மணலை தூவிவிட்டு தப்பிய யுவதிகள் - மக்கள் கூடியதால் உள்ளாடைகளுடன் ஓடிய இளைஞர்கள்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிகளவில் போதையடைந்த இரு இளைஞர்கள் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய யுவதிகளிடம் தமது அந்தரங்கப் பகுதிகளை காண்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரது பிறந்தநாளை முன்னிட்டு மது அருந்திய நண்பர்களான மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் அதிகளவான போதையில் கலேவெல, தலகிரியாகம பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சிகரெட் கேட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போது, அந்த உணவகத்தின் பணியாளர்களான யுவதிகள் இருவரை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தாக்கியதுடன் காற்சட்டைகளை கழற்றி அந்த யுவதிகளிடம் தமது மர்மப் பகுதிகளை காண்பித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதிகள் இருவரும் கலேவெல பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்சட்டைகளை கழற்றி ஆபாசமான முறையில் செயற்பட்ட இளைஞர்கள் மீது மணலை தூவி தாக்கிவிட்டு யுவதிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதன்போது அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடியதையடுத்து இளைஞர்கள் இருவரும் தாம் வந்திருந்த மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே காற்சட்டைகளை கைவிட்டு உள்ளாடைகளுடன் தப்பிச் சென்றதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது அவர்கள் இருவரும் கலேவெல பஹலவெவ மற்றும் குரக்கன்ஹேன ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாங்கள் செய்த தவறுக்காக இளைஞர்கள் இருவரும் பொலிஸார் முன்னிலையில் மன்னிப்பு கோரினர்.
னினும், இளம் யுவதிகளிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்டதுடன், அவர்களை தாக்கியமைக்காக அவர்கள் இருவரையும் தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சானக்க விதானகே தெரிவித்தார்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment