கோபமாக வெளியேறிய அஜித், 'என்ன பிரயோசனம்' என்கிறார் ரஞ்சன்
புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சமூக மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அஜித் பி.பெரோ, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்காது, கோபமாக சென்றதை அவதானிக்க முடிந்தது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதியமைச்சரான அவருக்கு, இராஜாங்க அமைச்சர் பதவியே நேற்று (25) வழங்கப்பட்டது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிப்பாரென, ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும், தன்னுடைய வாகனத்தின் கண்ணாடியை கூட இறக்கமால், மிகவேகமாகவே சென்றுவிட்டார். அவருடைய முகத்தில் சந்தோஷத்தைக் காணக்கிடைக்கவில்லை.
இதனிடையே கருத்துரைத்த சமூக வலுவூட்டல், நலம் மற்றும் கண்டிய பாரம்பரிய பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, “உங்களிடம் கோபம் கொள்வதில் என்ன பிரயோசனம் இருக்கிறது” எனக் கேட்டார்.
Post a Comment