தங்கம், விலை குறைகிறதா..?
எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது.
கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 54 ஆயிரத்து 650 ரூபாவாக விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலை 53 ஆயிரத்து 550 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வாரமளவில் இதன் விலை இன்னும் கூடுதலாக வீழ்ச்சியடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment