Header Ads



கனடாவில் ஒரு, குடும்பத் தலைவரின் வேதனை


சிரியா உள்நாட்டு போரிலிருந்து தப்பி கனடாவுக்கு அகதியாக வந்த குடும்பத்தின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபகர நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு கனடாவுக்கு அகதியாக குடும்பத்துடன் வந்தவர் Hussam Alahmad.

தங்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்கு நன்றி செலுத்தும் விதமாக கனடா பிரதமரின் பெயரையே தன்னுடைய இரண்டாவது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

உணவுக்கும் உடைக்கும் வீட்டு வாடகைக்கும் அரசின் உதவித்தொகையையே நம்பியிருக்கும் Hussam Alahmad என்னும் அந்த சிரிய அகதி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தரையில்தான் படுத்து உறங்குகிறாராம்.

அக்கம் பக்கம் பேச்சுத் துணைக்குக் கூட யாருமின்றி தனிமையில் தவிக்கின்றார்களாம்.

அகதிகளாக வருவோருக்கு அரசாங்கமோ அல்லது தனியாரோ Sponsorship வழங்குவதுண்டு.

Hussamக்கு யாரும் Sponsorship வழங்கவில்லை, எனவே Sponsorship பெற்ற சிரிய அகதிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு இவர்களுக்கு கிடையாது.

சிரியாவில் கார் டீலர்ஷிப்பில் 14 ஆண்டு அனுபவம் கொண்ட Hussamக்கு கனடாவில் வேலை எதுவும் கிடைக்கவில்லை, அவருக்கு யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. அதற்கு முதலாளிகள் கூறும் காரணம், அனுபவம் இல்லை என்பது.

அதாவது 14 ஆண்டுகள் கார் டீலர்ஷிப்பில் அனுபவம் இருந்தாலும் கனடாவில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதால் அவரால் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள இயலவில்லை.

எனக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை என்றால் கனடா அனுபவம் எப்படிக் கிடைக்கும் என்று வேதனையுடன் கேட்கிறார் Hussam.

உள்ளூர் உணவகம் ஒன்றில் தன்னார்வலராக பணிபுரியும் Hussam எப்படியாவது ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும், சொந்தக் காலில் நிற்கவேண்டும் கனடாவிலிருக்கும் தனது மனைவி பிள்ளைகள், துருக்கியிலிருக்கும் தனது தாய் ஆகியோருக்கு உதவவேண்டும் என்பது அவரது ஆசை.

எனக்கு வேண்டியது உதவித்தொகை அல்ல, ஒரு வேலை என்று கூறும் Hussam, தனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் அதன் மூலம் தன் குடும்பத்தின் சேவைகளை சந்திப்பதோடு தனக்கு நாடு கொடுத்ததை ஒரு நாள் திரும்பக் கொடுக்கவும் விரும்புவதாகக் கூறுகிறார்.

“நான் கனடாவை நேசிக்கிறேன், கனடாவுக்காக எதையும் செய்யத் தயார், ஆனால் அதை செய்யத் தொடங்குவதற்கு எனக்கு இன்னும் வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்கிறார் Hussam Alahmad.

No comments

Powered by Blogger.