Header Ads



தப்பு செய்தால் பிடிபடுவீர்கள் - வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை

அதிவேக நெடுஞ்சாலையில் வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை, அந்த வாகனங்கள் வெளியேறும் இடங்களிலேயே வழங்குவதற்கான புதிய வேக அளவீட்டு அமைப்பு பொருத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

காவல்துறையுடன் இணைந்து அமுல்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் போது கண்காணிப்பு நேரம், வேகத்துடன், வாகனங்களின் இலக்கங்களும் தெளிவாக தெரியும் வகையில் அந்த புகைப்படம் வழங்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமை பிரிவு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெறும் விபத்துக்களில் நூற்றுக்கு 27 வீதம், அதிக வேகத்தால் இடம்பெறுவதாக அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.