தேர்தலில் வெற்றியீட்டியவர்களிடையே, ஜனாதிபதி ஆற்றிய உரை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் தலைமை வகிக்கும் அரசியல் கட்சி, கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
வெற்றியீட்டிய, வெற்றியீட்டாத எந்தவொரு வேட்பாளர்களையும் தவிர்க்காது சகலரையும் ஒன்றிணைத்து கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான தமது பிரதிநிதிகளாக நியமிப்பதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பீ.டி.பீ ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அபேட்சகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளற்ற அரசியலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குறுதியை பாதுகாத்து முன்னோக்கி செல்ல சகல பிரதிநிதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தவாறு சரியான பாதையில் பலமான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
ஊழல், மோசடிகளற்ற அரசியல் இயக்கத்திற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணை தொடர்பாக தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதன்பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் தமது முதன்மை விடயமாக அமைந்திருந்த ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தேசிய ரீதியில் நாட்டின் சமயத் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகலரதும் பங்களிப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.
மேலே உள்ள படம் பழையது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா இப்போது இங்கு இல்லை. வௌிநாடு சென்றுள்ளார்.
ReplyDeleteஜனாதிபதி செயக ஊடகப் பிரிவிடமிருந்து jaffna muslim இணையத்திற்கு உத்தியோகபூர்வமாக கிடைத்த ஊடக அறிக்கையினையும், புகைப்படத்தையுமே நாங்கள் பதிவேற்றினோம். சந்திரிக்கா அமர்ந்திருப்பது பழைய புகைப்படமல்ல. அது புதிய படமென்றும் குறித்த நிகழ்வுடன் தொடர்புடைய படமென்றும் நாங்கள் நம்புகிறோம்.
ReplyDeleteSorry Chandrika is now in UK.So your picture not soutable for this artical.
ReplyDelete