பதவியை எப்படி, தக்கவைத்தார் ரணில்..?
நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கப்போவதாக கூறிவந்த நிலையிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொண்டார்.
பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க பதவியில் நீடிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை வெளியிட்டிருக்கின்றனர். தனித்து ஆட்சியமைப்பதற்கு சுதந்திரக் கட்சி கடுமையாக முயற்சித்தபோதிலும் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டுள்ளது.
எனவே ஐக்கிய தேசியக்கட்சி தாம் பெரும்பான்மையுடன் இருப்பதாகவும் சுதந்திரக்கட்சியின் பக்கத்தில் யாருக்காவது பிரதமர் பதவிக்கு ஆசை இருந்தால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டியது அவசியம் என்றும் கூறிவருகின்றது.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக்கட்சியினர் இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். நேற்று முன்தினமும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் தான் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் இணைத்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பிலும் எடுத்துரைத்திருந்தார். நல்லாட்சி அரசாங்கம் பலமாக இருக்கின்றது என்றும் அது தொடரும் என்றும் பிரதமர் கூறியிருந்தார். அதாவது ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின்போது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவந்து தனக்கெதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டால் தான் பதவி விலகுவதாகவும் அதனை விடுத்து எந்தக் காரணத்திற்காகவும் பதவி விலகப் போவதில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாம் இடத்திற்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகளை அடுத்து தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரியதாகவும் அவர் அதனை மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. எனினும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழல் காணப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் தேசிய அரசாங்கம் நீடிக்கின்றது.
respect the verdict of the people and resign with respect or you will be annihilated in 2020 elections.
ReplyDelete2020 is miles away????????????
ReplyDeleteBrother Asfar, Your argument is wrong we did not have a parliamentary election at all.
ReplyDelete