வெளியேவர மக்கள் அச்சம், நாய்களை வேட்டையாடும் சிறுத்தைகள் - ஹட்டனில் சம்பவம்
ஹட்டன் - குடாகம கிராமத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியவில்லை என பிரதேசவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தை சுற்றியுள்ள தேயிலை மலைகளிலுள்ள சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடுவதற்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுளைவதாகவும், கடந்த ஒரு மாத காலத்திற்குள் 15க்கும் மேற்பட்ட வீட்டு வளர்ப்பு நாய்கள் சிறுத்தையினால் கொல்லப்பட்டுள்ளதாகவும், சில நாய்கள் படுகாயமுற்ற நிலையில் கானப்படுவதுடன், நாய்களை வீடுகளினுள்ளே தற்போது வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரவு 8 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளிவர முடியாத நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் குடியிருப்பாளர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
சிறுத்தைகள் அருகிலுள்ள கற்குகைக்குள் நாய்களை கடித்து இழுத்து செல்வதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment