பிரியங்க பற்றி, வாய்திறந்தார் மஹிந்த
லண்டனில் தமிழர்களின் கழுதை அறுக்கப் போவதாக மிரட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரிகேடியர் கழுத்தில் கை வைக்கும் காட்சி பிரபலபமடைந்துள்ள நிலையில் அவரை சேவையில் இருந்து இடைநிறுத்துவதனை அனுமதிக்க முடியாதென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய போரினை முடிவுக்கு கொண்டுவந்தது இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சிங்க சின்னத்திற்கு பதிலாக வேறு மிருகத்தை பயன்படுத்த கூறுகின்றீர்களா என மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
தாய் நாட்டிற்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துவதற்காக சட்டரீதியான அனுமதி வழங்கிய உலகின் முதலாவது அரசாங்கம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து மனித உரிமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கு அரசாங்கம் முழுமையான அதிகாரத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்க சின்னத்தை காட்டி கழுத்தை சொறிந்தார் என்பதற்காக இராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்வது என்பது புலம்பெயர் தமிழர்கள் கூறுவதை செய்வதனை போன்றதா என இன்று கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை மேற்கொள்வதற்காக முதலில் மங்கள சமரவீர அனுமதி வழங்கினார். சிலர் இவ்வாறு நாட்டை காட்டி கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தளதா மாளிகைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Post a Comment