இன்று ரணில் செய்த நல்லகாரியம்
ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களை விரைவுப்படுத்தும் பொருட்டு மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று -26- காலை அலரிமாளிகைளில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த குழு தொடர்பான அறிவித்தல் வெளியானது.
அமைச்சர்களான டி.எம் சுவாமிநாதன், ராஜித்த சேனாரத்ன மற்றும் அஜித் பீ.பெரேரா ஆகியோர் அந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் செயற்படவுள்ள இந்த குழுவின் செயலாளர் பதவியை சட்டம் மற்றும் ஒழுங்கு துறை அமைச்சின் செயலாளர் வகிப்பார்.
இதனிடையே, குற்றம் மற்றும் நீதி தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் தலைமையில் அமைச்சர்களான தலதா அத்துகோரல மற்றும் சாகல ரத்ணாயக்க ஆகியோரை உள்ளடக்கிய மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் எந்த உயர், மேல்,அப்பீல் எந்த நீதிமன்றங்களும் அவசியமில்லையாம். தகுதியும் திறமையும் வாய்ந்த அமைச்சர்களால் நுண்ணியமாக விசாரித்து உரிய தண்டனை கொடுத்து குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பவும் அந்த மந்திரி குழுக்களுக்கு அதிகாரம் இருக்கின்றதாம். மற்றொரு பொம்மை விளையாட்டு?
ReplyDelete