ரணில் பற்றி கவலையடைகிறேன் - மைத்திரி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிய பலர் அவரை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறார். இந்த நிலை குறித்து நான் மிகுந்த கவலையடைகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக் காட்சி நடத்தியுள்ள நேர்காணலின் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருக்கிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஒருவர். இதற்காக, அவருக்கு பிரதமர் பதவியை கொடுக்க முடிந்தமையையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன். இதுதான் சிறந்த நன்றி பாராட்டுதலாகும்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதையிட்டு கவலைப்படும் விடயமும் உள்ளது. அதுதான், அவருடன் இருக்கின்றவர்கள் சிலர் அவரை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவது. அவர் நம்பிய பலர் அவரை சிரமத்துக்குள் தள்ளி விடுவது. இதனை நினைத்து நான் கவலைப்படுகின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பிணை முறி விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க நியமித்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். ரவி கருணாநாயக்க மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவர்களையே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment