இறந்துபோன தனது நண்பரை, பாராளுமன்றத்தில் புகழ்ந்துபேசிய ஜனாதிபதி
எந்தவொரு மோசடியுமற்ற ஒருவராகவே விஷ்வ வர்ணபால காணப்பட்டார். எனினும் தற்போது அரசியல் வாதிகளின் பெயர் வெளிப்பட்டவுடன் அவர்களின் ஊழல் மோசடிகளும் சேர்ந்தே வெளிவருதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மீதான அனுதாப பிரேரணையின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
விஷ்வ வர்ணபால எனது சிறந்த நண்பராகும். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்க தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதேபோன்று இலக்கியம் சார் நூல்களையும் எழுதியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அனைத்து தலைவர்களுடன் இணைந்து செயலாற்றியுள்ளார். இருந்த போதிலும் எந்தவொரு ஊழல் மோசடிகளுக்கும் உள்ளாகவில்லை. பரிசுத்தமான முறையிலேயே தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார். அனைத்து சேவைகளையும் நேர்மையாகவும் பரிசுத்தமாகவும் முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட்டார்.
ஊழல் மோசடிகளில் அவர் ஒருபோதும் ஈடுப்படவில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு அவர் உள்ளாகவும் இல்லை. எனினும் தற்போதைய அரசியலைவாதிகளை குறிப்பிட்டவுடன் ஊழல் மோசடி பட்டியலே வெளிவரும்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிககு அவர் பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். அதனை மறக்க முடியாது என்றார்.
Post a Comment