சவூதியிலிருந்து, இலங்கை வரவுள்ள உயில் பணம்
சவூதி அரேபிய எஜமானின் அன்பளிப்பு ஒன்றை வழங்க தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ஊழியர், பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் தொழில் புரிந்த மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை இவ்வாறு பணியகத்திற்கு வந்துள்ளார்.
மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை தொழில் புரிந்த வீட்டின் எஜமான் அவரை தேடுவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை சவூதியில் தொழில் புரிந்த வீட்டின் எஜமான் தனது இறுதி விருப்ப பத்திரத்தில், (ஒரு தொகை பணம்) பங்கை வழங்குவதாக கூறியுள்ளதால், அவரை தேடி தருமாறு அங்குள்ள இலங்கை தூதரகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை கண்டுபிடிக்க ஊடகங்கள் ஊடாக மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பைக்கு உரிய பணம் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, கையளிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Let us make Dua that.... this will bring good for his life..
ReplyDeleteCan you recall the atrocities done by Saudies, can you recall what happened to Rizana and others.
ReplyDeletewhat is your point ?
ReplyDelete