அம்பாறை காசிம் ஹோட்டலும், தாக்குதல் பின்னனியும்..!!
அம்பாறை காசிம் ஹோட்டல் என்றால் அதற்கு நீன்ட வரலாறு உள்ளது.அது போன்று அம்பாறை பள்ளிவாயலுக்கு நீன்ட வரலாறும் உள்ளது. எனக்கும் சிறுவயதில்இருந்து அம்பாறைக்குமான தொடர்பு அதிகம்!
எனது சகோதரி திருமணம் முடித்த காலப்பகுதியில் அம்பாறையில்தான் வசித்து வந்தார் எனது மச்சானுக்கு சொந்தமான கடைதான் தாக்குதலுக்கு உள்ளான நியூ மஹஜன ஸ்டோர்ஸ்
சுமார் 35 வருடங்களுக்கு முன்பு இருந்தே அவர்கள் அங்கு வசித்து வருகின்றார்கள் தாக்குதலுக்கு இலக்கான அம்பாறை நியூ மஹஜன ஸ்டோர்ஸ் எனது மச்சானுக்கு சொந்தமானது.
அது போன்று அம்பாறை காசிம் ஹோட்டல் என்ற உணவகம் பெறும்பான்மை இனத்தவருக்கு சொந்தமானது குத்தகை அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த மர்ஹும் காசிம் முதலாளி உணவகத்தை செய்து வந்தார் அவர் பெறும்பான்மை மக்களின் அதிக நன்மதிப்பை பெற்றவர் காசிம் முதலாளி என்றால் அவருக்கு அங்கு தனி மரியாதை அவரை தெரியாதவர்கள் யாருமில்லை காசிம் முதலாளி 2006,12,05 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.
அவரின் ஜனாஸாவிற்கு அம்பாறையில் இருந்து கூடுதலான பெறும்பான்மை இனத்தவர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்து கலந்துகொண்டார்கள்! அம்பாறையில் பெறும்பாலான இனவாதிகள் இருந்தாலும் அங்கு இருந்த முஸ்லிம்களுடன் ஒற்றுமையாகவே கடந்த காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
நேற்று இரவு நடந்தது என்ன?
நேற்று இரவு பெறும்பான்மை இனத்தை சேர்ந்த இருவர் காசிம் ஹோட்டல் என்ற உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். முட்டை ரொட்டியே சாப்பிட்டுள்ளார்கள் முட்டை ரொட்டி சாப்பிடுவற்காக கரி கேட்டுள்ளார்கள்
கரிக்குள் வெள்ளையாக சிறு பொருள் கிடந்துள்ளது உடனே அவர் அதை எடுத்துக்கொண்டு இது நீங்கள் கரிக்குள் ஏதோ களப்பம் செய்துள்ளீர்கள் என்று சத்தமிட்டுள்ளார் உடனே உணவகத்தில் இருந்தவர்கள் இது அவ்வாரான ஒன்றும் இல்லை கரியை டிக் பன்னுவதற்காக போடப்பட்ட வெறும் மா என்று தெளிவுபடுத்தியுள்ளனர்!
அதற்கு செவிமடுக்காத பெறும்பான்மை இனத்தை சேர்ந்தவர் ஏனையவர்களுக்கு தொடர்புகொண்டு உணவகத்துக்குள் வரவழைத்துள்ளனர் பின்னர் அது கலவரமாக மாறியுள்ளது! சாப்பாட்டுக்குள் மாத்திரையை போட்டுகொடுக்கின்றார்கள்யென செய்தியை பரப்பி மக்களை கூட்டியுள்ளார்கள்!
இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகம் பாவிக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது! தாக்குதலில் 3உணவகமும் 1 பேக் கடையும் பள்ளிவாயலும் சேதமாக்கப்பட்டுள்ளது! ஏனைய உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது உடனடியாக இதுதொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்! பள்ளிவாயலை தாக்கிய போது பள்ளிவாயலுக்குள் இருந்த சகோதரர்கள் தாக்குதலை வேண்டிக்கொண்டு ஓடி ஒலிந்துள்ளனர். நிலவரத்தை அவதானித்த நான் எப்படியாவது பள்ளிவாயலுக்குள் எமது சார்பானவர்களை அனுப்ப வேண்டுமென முயற்சித்தேன்! எனது சகோதரர் றிஸ்வான் பள்ளிவாயலுக்கு செல்ல முடியாமல் எல்லையில் நின்றார் யாராவது ஒரு முஸ்லிம் அமைச்சரை அங்கு அனுப்ப வேண்மென முயற்சித்தேன் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அங்கு செல்வதாக அறிந்தேன் உடனே அவரை தொடர்புகொண்டு அவருடன் எனது சகோதரனை அனுப்பினேன் இன்று அதிகாலை 5:00 மணியவில் பள்ளிவாயலுக்குள் சென்றார்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காட்டு பகுதியில் ஒலிந்திருந்த எமது சகோதரர்கள் பள்ளிவாயலுக்குள் வர ஆரம்பித்தார்கள் உடனே பள்ளிவாயல் சேதத்தை எனது சகோதரர் புகைப்படம் எடுத்து அனுப்பினார் அந்த புகைப்பம்களை பதிவிட்டிருந்தேன் அந்த புகைப்படம்களே இன்று அம்பாறை தாக்குதல் தொடர்பான செய்திகளுடன் இணையத்தளம்களில் பகிரப்பட்டுள்ளது. பின்னர் காலை 7:00 மணிக்கு பின்னர் பள்ளிவாயல் முன்றலில் பெறும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக கூடியுள்ளனர் இதனால் மீண்டும் வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது அதனை தொடந்து பாதுகாப்பு தரப்பினர் பள்ளிவாயல் துளைவாயல் வீதியை முடியுள்ளனர் அதன்பின் பள்ளிவாயலுக்குள் செல்வதை இதுவரை அனுமதிக்கவில்லை!
அம்பாறையின் தற்போதைய நிலவரம்?
இரவு 9:30 மணியவில் அம்பாறைக்கு சென்றேன் பள்ளிவாயலுக்கு செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளது,சேதமாக்கப்பட்ட கடைகைளுக்கு இராணுவ,பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அம்பாறையின் நகரபாதுகாப்பு வளமை போன்றே இருந்தது பெறும்பான்மை மக்கள் மத்தியில் சாப்பாட்டுக்குள் மாத்திரியை போட்ட கதையே விதைக்கப்பட்டுள்ளது, விதைக்கப்பட்டும் வருகிரது,
இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் நாளை தொடரும்…
-முஹம்மட் பர்சாத்-
Post a Comment