வெட்கமென்பது இல்லாமல் போய்விட்டது - சிரியாவிலும், மியான்மாரிலும் கொடுமைகள்
நவீன காலத்தில், ஏனையோரை ஒடுக்குதல், வழக்கத்துக்கும் புதிய பாணியாகவும் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் .உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும், அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று (26) ஆரம்பித்தது. அதில், ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகின் எப்பகுதிகளிலும், வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது எனக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு, இனவாதம் ஆகியன, ஐரோப்போவிலும் அதிகரித்துள்ளமையைச் சுட்டிக்காட்டினார். சிரியாவிலும் மியான்மாரிலும் எல் சல்வடோரிலும், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய அவர், இன்னமும் பணியாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
இந்த அமர்வில், இலங்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ள போதிலும், உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில், இலங்கை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
உங்கள் கூற்றில் இலங்கையை சேர்த்துக் கொள்ளுங்கள்.....
ReplyDelete