Header Ads

சிரியர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் - அங்குநடப்பது மனிதர்கள் செய்யக்கூடிய செயலே இல்லைஇ

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரியாவில் நடக்கும் போர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்து வரும் போரில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் இதுவரை சுமார் 700 பேர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு, ஆதரவு அளிப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘சிரிய அரசும், ரஷ்ய, ஈராக் படையும் அங்கு இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரிய தவறு.

மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்களை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனிதர்கள் செய்ய கூடிய செயலே இல்லை, இந்த மோசமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அங்கு மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு வசதியாக அங்கு இருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் சிரிய மக்களும், இஸ்லாமிய மக்களும் சிரிய போருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அமெரிக்க குப்பையில் மினுங்கும் குண்டுமணியப்பா கனடா மைந்தா ! நீ
    மேற்கைய சேற்றில் முளைத்த செந்தாமரையப்பா ஜஸ்டின் நீ !

    பிஞ்சு குழந்தைகளை பஞ்சாய் பறக்கவிடும் மனித மிருகங்களின் நடுவே
    கொஞ்சி விளையாட ஆசை கொள்ளும் நீ எப்படி வளர்ந்தாயோ என ஆச்சரியமாயுள்ளதப்பா !

    சொற்பமும் மிஞ்சாமல் மேற்குலகின் முகவர்கள் மத்திய கிழக்கை சிதைத்துக்கொண்டிருக்க..
    மேற்குல இறக்குமதி வேசிகளோடு பல காட்டறபிகள் கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்க...
    பலருக்கு இறந்து போன,சிலருக்கு மறந்துபோன மனசாட்சி, மனிதாபிமானம் உனக்கு மட்டும்
    எப்படி வந்ததென்று புரியாமல்.... இரத்தக்கண்ணீரோடு.. ஆனந்த கண்ணீரையும் கொட்டுகிறது மனசு!

    ReplyDelete
  2. அமெரிக்க குப்பையில் மினுங்கும் குண்டுமணியப்பா கனடா மைந்தா ! நீ
    மேற்கைய சேற்றில் முளைத்த செந்தாமரையப்பா ஜஸ்டின் நீ !

    பிஞ்சு குழந்தைகளை பஞ்சாய் பறக்கவிடும் மனித மிருகங்களின் நடுவே
    கொஞ்சி விளையாட ஆசை கொள்ளும் நீ எப்படி வளர்ந்தாயோ என ஆச்சரியமாயுள்ளதப்பா !

    சொற்பமும் மிஞ்சாமல் மேற்குலகின் முகவர்கள் மத்திய கிழக்கை சிதைத்துக்கொண்டிருக்க..
    மேற்குல இறக்குமதி வேசிகளோடு பல காட்டறபிகள் கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்க...
    பலருக்கு இறந்து போன,சிலருக்கு மறந்துபோன மனசாட்சி, மனிதாபிமானம் உனக்கு மட்டும்
    எப்படி வந்ததென்று புரியாமல்.... இரத்தக்கண்ணீரோடு.. ஆனந்த கண்ணீரையும் கொட்டுகிறது மனசு!

    ReplyDelete

Powered by Blogger.