Header Ads



இராணுவம் பயணிக்கும் பஸ் வெடிப்பு, தீவிர விசாரணை ஆரம்பம் - 11 பேர் கவலைக்கிடம் (படங்கள்)


தனியார் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே குறித்த பேரூந்தில் தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பேரூந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தில் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 பேரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம், பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதி கஹாகொல்லை என்ற இடத்தில் இன்று காலை 5.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து அதிகாலை தியத்தலாவைக்கு சென்ற குறித்த பேரூந்து தியத்தலாவையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெபராவை – கிராந்துருகோட்டை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பேரூந்தின் சாரதிக்கு பின்னாலுள்ள 3 ஆவது ஆசனத்தில் ஏற்பட்ட புகையுடன் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

வட பகுதியிலிருந்து இராணுவத்தினர் விடுமுறையில் தென்பகுதிக்கு வரும்போது யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் பேரூந்தில் வந்து தியத்தலாவையிலிருந்து மற்றைய பேரூந்தில் பயணிப்பது வழமையாகும்.

இந்நிலையில், இராணுவத்தினரும்  வழமைபோன்று குறித்த பேரூந்தில் பயணித்த போதே, இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் குறித்து, பண்டாரவளை மற்றும் தியத்தலாவைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Powered by Blogger.